விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையக் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்ட பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
- விநாயகர் நாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் 74,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
- களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்; சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது
- வேற்றுமத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் அருகே விநாயகர் சிலைகளை நிறுவக்கூடாது
- விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் 24 மணி நேரமும் விழா ஏற்பாட்டாளர்கள் இருக்க வேண்டும்
- அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த வேண்டும்,பட்டாசு வெடிக்கக்கூடாது
- விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் மத துவேச முழக்கங்களை எழுப்பக்கூடாது.
- விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாகவும், முக்கியமான ஊர்வலங்களில் கண்காணிப்பு பணிக்காக டிரோன்கள் மற்றும் மொபைல் சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்!
- விநாயகர் சதுர்த்தி தொடர்பான விளக்கங்கள் மற்றும் தகவல்களுக்கு 044-28447701 என்ற எண்ணில் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.