Site icon ITamilTv

NIA investigation : ஆஜரான NTK நிர்வாகிகள்

NIA investigation

NIA investigation : ஆஜரான NTK நிர்வாகிகள்

Spread the love

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட மூன்று பேர் விசாரணைக்காக ஆஜராகி (NIA investigation) உள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன், கோவை முருகன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஆதரவாளர்கள் வீடுகளில் கடந்த இரண்டாம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தின் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சோதனை நடைபெற்றதாகவும்,

என்ஐஏ விசாரணைக்கு ஒத்துழைத்தால், கைது நடவடிக்கை மேற்கொள்ளமாட்டோம் எனவும் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில், என் ஐ ஏ அனுப்பிய சம்மன் அடிப்படையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சாட்டை துரைமுருகன் தென்காசியை சேர்ந்த இசை மதிவாணன்

மற்றும் கோவையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி முருகன் ஆகிய மூன்று பேர் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் சங்கர்,

என்ஐஏ விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் கேட்கக் கூடிய ஆவணங்களை வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.

அதே வேளையில் தேர்தல் நேரத்தில் கட்சியின் செயல்பாட்டை முடக்கும் நோக்கத்தோடு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க : TVK எங்கள் கட்சியின் பெயர்!- வேல்முருகன்

நாளை இடும்பவனம் கார்த்திக், மற்றும் தென்னகம் விஷ்னு ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக மறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வழக்கில் தமிழக க்யூப் பிரிவு போலீசாரால் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி மற்றும் கபிலன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை தமிழ்நாட்டில் மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கத்தில் செயல்பட்டதும்,

இதற்காக அவர்கள் வெளிநாட்டில் உள்ள சிலரிடம் நிதி பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று சோதனையில் சிக்கியுள்ள நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த nia (NIA investigation) திட்டமிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கத்தை தமிழகத்திலிருந்து மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அதற்காக வெளிநாட்டிலிருந்து பல்வேறு நபர்களிடம் நிதி திரட்டியதாக விசாரணையில் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் இந்த சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாகும் சில ஆவணங்களை கைப்பற்றி சென்று இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


Spread the love
Exit mobile version