மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதி ( West Bengal Passenger train accident ) கோர விபத்து நிகழ்ந்துள்ளது .
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது . டார்ஜிலிங் மாவட்டம் பனிஷ்தேவா பகுதியில் நின்று கொண்டிருந்த கஞ்ஜன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதியது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
Also Read : பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் – தலைவர்கள் வாழ்த்து வாழ்த்து..!!
சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி 3 பெட்டிகள் கடமையாக சேதமடைந்த நிலையில் இந்த விபத்தில் தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி பலர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும் என்றும் மீட்புக்குழுவினரிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது :
டார்ஜிலிங் மாவட்டத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை சம்பவ ( West Bengal Passenger train accident ) இடத்திற்கு விரைந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.