Site icon ITamilTv

பருவமழையா இருந்தா என்ன? எதிர்கொள்ள தயார்- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!!

KN Nehru

Spread the love

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

“தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. திருச்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னேற்பாட்டு பணிகள் தயாராக உள்ளது.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கிட்டத்தட்ட 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 20 செ.மீ அல்லது 25 செ.மீ மழை பெய்தால் எந்த பிரச்னையும் இல்லை. திடீரென்று ஒரே நாளில் 40-50 செ.மீ மலை பெய்தால் கூட பிரச்னை இல்லை.

சென்னை மாநகராட்சி நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து புதிதாக ரூ.22 கோடி மதிப்பில் எந்திரம் வாங்கி உள்ளோம். அந்த எந்திரத்தை பயன்படுத்தி அனைத்து வாய்க்காலிலும் தூர்வாரப்பட்டு வருகிறது.

எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது எல்லா மாநகராட்சிகளிலும் வாய்க்காலை சுத்தப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்.

எப்படி தண்ணீர் தேங்கினால் மோட்டார் வைத்து உடனே அகற்றப்படும். எல்லா சுரங்கப்பாதைகளையும் சுத்தம் செய்து விட்டோம்” என்று கூறினார்.


Spread the love
Exit mobile version