தஞ்சையில் ஆசிரியர் ரமணி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது .
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்த முத்து என்பவரது மகள் ரமணி
25 வயதாகும் ரமணி மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக கடந்த 4 மாதங்களாக வேலை செய்து வருகிறார்
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 28 வயதாகும் மதனும் , ரமணியும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 மாதங்களுக்கு முன்பு மதன்குமாரின் பெற்றோர் பெண் கேட்டு ரமணி வீட்டிற்கு சென்றுள்ளனர் . ரமணியின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்த நிலையில் ரமணி தனது காதலை கைவிட்டுள்ளார்.
Also Read : நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு..!!
இதனால் கோபம் கொண்ட மதன் இன்று (20.11.2024) காலை பள்ளியில் ஆசிரியர் ஓய்வறையில் இருந்த ரமணியை கத்தியால் குத்தியுள்ளார்.
ரமணி தாக்கப்பட்டதை பார்த்த சக ஆசிரியர்கள் உடனே ரமணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த கொடூர சமபவத்தில் கைது செய்யப்பட்ட மதனை போலீசார் சிறையில் அடைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.