Site icon ITamilTv

முதல் குற்றவாளி இவர்தான்! – பாதிக்கப்பட்டவர்களை டார்ச்சர் செய்யும் போலீஸ்! – வேங்கை வயல் ஆய்வில் சவுக்கு பரபரப்பு பேட்டி!

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் குடியிருக்கும் பகுதியில் இருக்கும் நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் ஏன் இந்த பகுதி மக்களைச் சந்திக்கவில்லை? என்று சவுக்கு சங்கர் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் பொதுமக்கள் குற்றம்சாட்டியும் அந்த நபரை இதுவரை விசாரணை நடத்தவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 இறையூர் சென்று பார்வையிட்ட சவுக்கு சங்கர்:

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட பொதுமக்களைச் சந்தித்த சவுக்கு சங்கர் நடைபெற்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சவுக்கு சங்கர்,

இறையூர் கிராமத்தில் நடைபெற்ற விவகாரங்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும் வெள்ளனுர் காவல் துறையினர் மோசமான விசாரணை மேற்கொண்டு இருப்பதாகவும்,

சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும் தெரிவித்த அவர், தமிழகத்தில் இந்த சம்பவம் நடந்து நடந்து ஒரு மாதமான நிலையில் ஏன் இன்னும் இந்த அரசு குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை? என்று சவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

வேங்கைவயல் பகுதிக்கு முதல்வர் ஏன் செல்லவில்லை..?

மேலும் தமிழகத்தில் நடந்து இருப்பது சமூகநீதி அவலம் .ஏன் இன்னும் இந்த திராவிட மாதிரி ஆட்சி தான் சொல்லும் திமுக . பெரியார் மண் ,சமூகநீதி கொண்டு நடைபெற்று வரும் ஆட்சி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தவர்,ஏன் இந்த மக்களுக்கு ஆதரவு கொடுக்கவும் நம்பிக்கை அளிக்கவும், அரசு அதிகாரிகளோ அமைச்சர்களும் அந்த பகுதிக்கு செல்லலாது வெட்கக்கேடான செயல் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

அமைச்சர்களைத் தாக்கும் சவுக்கு:

மேலும் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் வாதிகள் செல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 20 வருடங்களுக்கு முன் இதே போன்ற  சம்பவம் தொல்குடியில் நடைபெற்றது.அப்பொழுது உடனடியாக தீர்வு கிடைத்தது.

ஆனால் சமூகநீதி ஆட்சி  நடந்து கொண்டிருக்கிறது  என பெருமைப்படுத்தி விளம்பரம் தேடிக்  கொள்ளும் திமுக அரசு அந்த தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் மெய்யநாதன் சாதி ரீதியாக உள்ள பாசத்தால் கண்டுகொள்ள வில்லை என்றும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் கந்தர்வகோட்டை தொகுதி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை.  இறையூர் வெங்கைவயல் ஊராட்சி மன்ற தலைவர் முத்தையாவின்  மனைவி தான்  தலைவராக  உள்ளார்.

ஆனால் அந்த பகுதி மக்கள் இதுவரை ஊராட்சி மன்ற தலைவரான பத்மாவை பார்த்தது இல்லை என்றும் அவரது கணவர் முத்தையா தான் அனைத்து  நல திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை கவனித்து கொள்வதாகவும் தெரிவித்த மக்கள், அவர் ஆதிக்க சாதி என்பதால் சாதிய மனப்பான்மையோடு ஆதிதிராவிட மக்களுக்கு எந்தவொரு நல உதவிகளையும் செய்வதில்லை என்றும் அம்மக்கள் தெரிவித்துள்ளதாக சவுக்கு சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர்; இந்த விவகாரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சிக்காரர்களும் இந்த விவகாரம் குறித்து கருத்து கூறவில்லை என்றும் குறிப்பாகப் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட யாரும் வரவில்லை என பகிரங்க குற்றம் சாட்டினார்.

இறையூர் கிராமத்தில் நடக்கும் விசாரணை என்ன?

மேலும் ஆதிதிராவிடக்காலனியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் உயர் நிலை  நீர்த் தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அனைத்து சாதியினருக்கும்  பொதுவான குடிநீர்த் தொட்டியிலிருந்து ஆதிதிராவிடர் காலனிக்குக் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 15 வயது விசாரணைக்கு  அழைத்துச் சென்றுள்ளனர். வழக்கை விரைவாக முடிக்க பாதிக்கப்பட்ட மக்கள் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாண்டுள்ளது என்று குற்றம் சாட்டிய அவர்; இரு தரப்பினரைச் சேர்ந்தவர்களையும் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இறையூர் கிராமத்தில் அரசு செய்ய வேண்டிய நடவடிக்கை :

இந்த கிராமத்தில் போதிய அடிப்படை வசதி செய்து தரவேண்டும். கிராமப் பகுதிக்குப் பின் புறப் பகுதியில் உள்ள கால்வாய்களை அகற்றித் தரவேண்டும் மேலும் இந்த கிராமத்தில்  எம்ஜிஆர் காலத்தில் வழங்கிய வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 30 ஆண்டுகளாக வசித்து வரும் இவர்களுக்கு மத்திய அரசின் பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும்.

மேலும் அங்கு  அரசுத் துறை தொடர்பாகப் படிக்கும் மாணவர்களுக்குப் படிக்க அடிப்படை வசதியாகக்  கல்வி கற்க ஏதுவாக கட்டமைப்பு அமைத்துத் தரவேண்டும் போன்ற கோரிக்கை விடுத்துள்ளார்.


Spread the love
Exit mobile version