ITamilTv

​கோடையில் ஏன் பொடுகு அதிகரிக்கிறது?​ – தீர்வுகள்!

dandruff increase in summer

Spread the love

dandruff increase in summer : கோடை காலங்களில் வானிலை வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். சிலருக்கு பொடுகு எப்போதும் தலையில் இருக்கும் என்றாலும் கோடையில் இவை மேலும் அதிகரிக்கும்.

மாசு, வெப்பமான காலநிலை, வியர்வை காரணமாக பொடுகு தொல்லை அதிகரிக்கிறது.

அதிகப்படியான வெப்பம் கூந்தலில் படும் போது அது முடி மற்றும் உச்சந்தலை இரண்டையும் சேதப்படுத்துகிறது. இது தான் பொடுகு வெடிப்பை உண்டாக்குகிறது.

இதனை தவிர்க்கும் வழிமுறைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்..

தலை முடியை அழுக்கில்லாமல் வாரம் இரண்டு முறை தலை குளியல் மேற்கொள்ள வேண்டும்.

வெளியில் செல்லும் போது தலை முடி நேரடியாக சூரியக் கதிர்களால் பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்க தொப்பி, துணி அணிந்து செல்வது நல்லது.

இதையும் படிங்க : Chia seeds side effects : சியா விதைகள்.. பக்க விளைவுகள்!

வாரம் ஒரு முறையாவது உச்சந்தலையை குளிர்விக்க கற்றாழையை (ஆலோவேரா ஜெல்) உச்சந்தலையில் தடவி குளிப்பதன் மூலம் பொடுகு வராமல் தவிர்க்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகரை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் பொடுகை கட்டுப்படுத்த முடியும்.

தலைக்கு குளிக்கும் போது அதிகப்படியான கெமிக்கல் பொருள்களை பயன்படுத்தவும் வேண்டாம். இது கூந்தலுக்கு பாதிப்பை உண்டாக்க செய்யும்.

dandruff increase in summer

முயன்றவரை இயற்கை பொருள்களை பயன்படுத்தி வெற்றுநீரில் விரல்களால் தேய்த்து குளித்தாலே அழுக்குகள் வெளியேறி கூந்தல் சுத்தமாகும். பொடுகு நீங்கும்.

மோசமான உணவு பழக்கங்களைத் தவிர்த்து சமச்சீரான ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.

தினமும் எண்ணெய் தேய்த்து ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்வதால் உச்சந்தலையில் ஒட்டியிருக்கும் பொடுகு வெளியேறும்.

வெறும் ஷாம்புக்களை மட்டும் பயன்படுத்தாமல் கூந்தலுக்கு ஏற்ற கண்டிஷனர் பயன்படுத்துவதன் மூலம் தலை முடியை வறட்சியில்லாமல் வைத்து பொடுகு வராமல் தடுக்கும் dandruff increase in summer.

இதையும் படிங்க : உத்தரபிரதேசம் மாநிலம் சம்பால் மாவட்டத்தில் இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் போலீசார் தடுப்பதாக தகவல்!


Spread the love
Exit mobile version