P. Chidambaram’s question to the Prime Minister : பிரதமர் நரேந்திர மோடி, பிரபல தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்த போது கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பான தரவுகளை பொதுவெளியில் பிரதமர் வெளியிடுவாரா என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது…
“2014 மற்றும் 2019 க்கு இடையில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியது என்று மாண்புமிகு பிரதமர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ப.சிதம்பரத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி!!
பிரதமர் ஒரு அறிக்கையை வெளியிட்டால், அந்த அறிக்கையை ஆதரிக்கும் தரவு அவரிடம் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அந்த வகையில் மரியாதையுடன், இங்கே சில கேள்விகள் உள்ளன (P. Chidambaram’s question to the Prime Minister) :
- தயவு செய்து தரவு மற்றும் தரவுகளின் ஆதாரத்தை பொதுவில் வெளியிடுவீர்களா?
- ஏன் 2019 உடன் நிறுத்த வேண்டும்? 2019 முதல் 2024 வரை என்ன நடந்தது?
- ஒரு துறையில் மட்டும் 6 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டன என்றால், 2014-2019ல் உருவாக்கப்பட்ட மொத்த வேலைகளின் எண்ணிக்கை என்ன?
- பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதம் 42 சதவீதம் ஏன்? டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?
- ஐஐடியில் 2024 வகுப்பில் 38 சதவீதம் பேர் ஏன் இன்னும் வேலைகளில் சேர்க்கப்படவில்லை? ஐஐடி பட்டதாரிகள் டிஜிட்டல் பொருளாதாரத்தால் புறக்கணிக்கப்படுகிறார்களா? என்று பதிவிட்டுள்ளார்.