Site icon itamiltv.com

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மசோதா – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார்.

இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அரசியலமைப்பு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டன.

உரையில் பிரதமர் மோடி இதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை மதிக்க வேண்டும்

இந்திய அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்படும் நேரம் இது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மசோதாக்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமானவை எனவும் அவர் கூறினார்.

மேலும், பெண்களின் பங்கு அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் மேலும் அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எந்தக் கட்சியும் கொள்கை ரீதியாக பெண்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்றும், அனைவரும் இதனை ஒருமித்த ஆதரவுடன் ஏற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பஞ்சாயத்து அமைப்புகளில் ஏற்கனவே 50% வரை பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை நினைவூட்டிய அவர்,

அதேபோல் மாநில மற்றும் தேசிய அளவிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்றார்.

பெண்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர்கள் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திலும் முக்கிய பங்காற்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version