இந்திய ரயில்வேவின் ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் கம்பளிகள் 1 அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் துவைக்கப்படும் என RTI கேள்விக்கு இந்திய ரயில்வே கொடுத்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் ரயில் வழி பயணத்தையே அதிகம் விரும்பி பயணம் செய்து வருகின்ற்னர் . இதற்கு முக்கிய காரணம் குறைந்த விலையில் அதிக வசதி என்பது தான்.
Also Read : காற்று மாசால் திக்குமுக்காடும் நாட்டின் தலைநகரம் – வெளியான அதிர்ச்சி தகவல்..!!
இருப்பினும் ரயில் பயணம் மேற்கொள்ளவது அத்தனை எளிதல்ல . நமது நாட்டில் ரயில் டிக்கெட் எடுப்பது இன்று வரை சற்று கடினமாக இருப்பதாக மக்களின் முதன்மை கருத்தாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மக்களின் நேரத்தையும் கஷ்டத்தையும் போக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்திய ரயில்வேவின் ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் கம்பளிகள் எந்த அளவிற்கு சுத்தமாக உள்ளது என்ற RTI கேள்விக்கு இந்திய ரயில்வே கொடுத்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு பயணம் முடிந்ததும் தலையணை உறை, வெள்ளை போர்வைகள் சலவைக்கு அனுப்பி வைக்கப்படும். கம்பளிகளை மடித்து ரயில்களிலேயே வைத்துவிடுவோம். கறை, துர்நாற்றம், ஈரம் இருந்தால் மட்டுமே கம்பளிகளை சலவைக்கு அனுப்புவோம் என ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளது அதிகம் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.