Site icon ITamilTv

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது..!!

award for captain memorial

award for captain memorial

Spread the love

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் உணவு வழங்கும் உலகின் ( award for captain memorial ) முதல் நினைவிடமாக திகழ்வதாக லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை விருது வழங்கி கவுரவித்துள்ளது.

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி உயிரிழந்தார்.

சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்தின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோக கடலில் மூழ்கடித்தது .

இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Also Read : சென்னையில் கோடை மழைக்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை – அதிர்ச்சி தகவல் கொடுத்த பாலச்சந்திரன்

இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் அவரது ரசிகர்கள் தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வரும் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் பசியுடன் செல்லாமல் இருக்க அங்கு தினமும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

விஜயகாந்த் இருந்த போதிலும் விஜயகாந்த் மறைந்த போதிலும் கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நினைவிடத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக திகழ்வதாக கூறி லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இந்த விருதினை கேப்டன் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் பெற்றுள்ள ( award for captain memorial ) புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Spread the love
Exit mobile version