Tamilnadu

சட்டமன்ற தேர்தலில் கனிமொழி எண்ட்ரி..? திமுக தொகுதி பின்னணி!

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்பின் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும். அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். திமுகவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், வேட்பாளர்களின் நேர்காணல் மற்றும் தேர்தல் களப்பணியை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையில் திமுக எம்பி கனிமொழி மாநில அரசியலுக்கு திரும்பி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது ஆதரவாளர்கள் முன்கூட்டியே திமுகவில் விருப்ப மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.இது கவனம் பெற்றுள்ளது.

மேலும் கனிமொழி திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஏதேனும் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது அவர் தென்மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, இந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதில் கனிமொழிக்கு முக்கிய பங்காக உள்ளது.

குறிப்பாக திமுக எம்.பியாக உள்ள கனிமொழிக்கு தூத்துக்குடியில் ஆதரவு அலைவிசுகிறது. தூத்துக்குடியில் கீதா ஜீவன், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற வலுவான எம்எல்ஏகள் உள்ளதால், கனிமொழி அவர்களது தொகுதிகளில் போட்டியிடினால் சிக்கல்கள் ஏற்படலாம். இதற்கிடையில் ஸ்டாலினின் அனுமதி கிடைக்குமா என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *