Site icon ITamilTv

வெற்றி துரைசாமி விபத்து ! DNA முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்பு- Kinnaur District Collector

வெற்றி துரைசாமி

வெற்றி துரைசாமி மாயம்! DNA முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்பு- Kinnoor District Collector

Spread the love

மாயமான வெற்றி துரைசாமி-யை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், டிஎன்எ முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கின்னூர் மாவட்ட ஆட்சியர் அமித்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

சைதைதுறை சாமியின் மகன் வெற்றி துரைசாமி, தனது அடுத்த திரைப்படத்திற்காக லொகேஷன் பார்ப்பதற்காக உதவியாளரும் நண்பருமான கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசம் சென்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு மாலை நேரத்தில் வாடகை காரில் சட்லஜ் நதி அருகே உள்ள நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தார்.

அப்போது போது ஓட்டுநர் டென்சினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கார் நிலைதடுமாறி சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது. திங்கள் கிழமை ஓட்டுநரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கோபிநாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் வெற்றி துரைசாமிக்கு என்ன ஆனது என தெரியாத நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், கடற்படையினர் என பல்வேறு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்லஜ் நதிக்கரையோரம் வசிக்கும் மக்களின் உதவியையும் வெற்றி துரைசாமியின் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.

மாயமான வெற்றியை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வெற்றியின் ஐஃபோன், மட்டும் சூட்கேஸ் உள்ளிட்ட உடமைகள் மீட்கப்பட்டுள்ளன.

பாறை இடுக்குகளில் மூளை திசு கிடைத்துள்ளது. இது வெற்றியுடையதா என அறிய டிஎன்ஏ சோதனைக்காக அனுப்பி வைகப்பட்டுள்ளது.

சைதை துரைசாமியின் டிஎன்ஏவும் சோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

வெற்றி துறைசாமியில் நிலை குறித்து தெரியாத நிலையில் ஸ்கூபா டைவிங் வீரர்கள், போலீசார், தேசிய பேரிடர் மீட்புபடையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று 7வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : rat fever: தீவிர சிகிச்சையில் 16 குழந்தைகள்..!

இந்த நிலையில் விபத்து எப்படி நடந்தது என்பதை விவரிக்கும் விதமாக அவரைப் போல DEMO பொம்மையை ஆற்றில் வீசி,

விபத்து நடந்தபின் உடல் எவ்வழியாக நதியில் சென்றிருக்கும் என தெரிந்து கொள்ள மீட்புக் குழுவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் டிஎன்எ முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கின்னூர் மாவட்ட ஆட்சியர் அமித்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தக்கறை, திசுக்கள் டிஎன்ஏ சோதனைக்காக அனுப்பி வைகப்பட்டுள்ள நிலையில், இதன் முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்பு உள்ளதாக கின்னூர் மாவட்ட ஆட்சியர் அமித்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version