உசிலம்பட்டி அருகே எலிக் காய்ச்சல் (rat fever) பாதிப்பு காரணமாக 16 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நிலையில் குழந்தைகளுக்கு அதற்கான மருந்துகள் அளிக்கப்பட்டு வருவதாக தலைமை மருத்துவமனை அதிகாரிகள் கூறினர்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேய டி.கிருஷ்ணாபுரம் மொக்கத்தான் பாறை என்ற ஜிராம் உள்ளது. இந்த கிராமத்தில் 100க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா்.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு இந்தப் பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்தது.
இந்த நிலையில் உசிலம்பட்டியில் கடந்த சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மொக்கத்தான்பாறை கிராமத்தில் மட்டும் 15 குழந்தைகள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரு நாள்களில் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 8 குழந்தைகளும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : Vetri Duraisamy-யின் நிலை? நதியில் பொம்மை அனுப்பி டெமோ! – தொடரும் தேடுதல்
கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் மேலும் 4 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சுமார் 145பச்சிளம் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதை கண்டு கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் சிறப்பு முகாம்களை அமைத்து மலைவாழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1756226296676565403?s=20
இதுகுறித்து கூறிய உசிலம்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனை அதிகாரிகள்,
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உள்படுத்திய போது, எலிக் காய்ச்சலால் குழந்தைகள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தைகளுக்கு எலிக் காய்ச்சலுக்கான (rat fever) மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினர்