Uncategorized

`பூம்புகார் தொகுதியின் நம்பிக்கை பெற்றவர்.. எளிதில் மக்கள் அணுக கூடிய MLA” – மீண்டும் அதிமுக வேட்பாளர் இவரா? கசிந்த தகவல்!

திரு.எஸ். பவுன்ராஜ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) சார்பில், பூம்புகார் சட்டமன்ற தொகுதியின் பிரதிநிதியாக 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று MLA பதவியில் இரண்டு முறை சேவை செய்தவர்.

2011–2016: MLA, பூம்புகார் (AIADMK) – வெற்றி 85,839 வாக்குகளுடனும்,
2016–2021: MLA, பூம்புகார் (AIADMK) – வெற்றி 87,666 வாக்குகளுடனும் வெற்றி பெற்றிருந்தார்.

கட்சிப்பணி:
மயிலாடுதுறை அஇஅதிமுக மாவட்ட செயலாளர் பதவியிலும் திறன்பட செயலாற்றி கட்சித் தலைமையின் அன்பைப் பெற்றவர்.


மக்கள் சேவை:
பொதுசேவைக்கு வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்துள்ள அவர், 24 மணி நேரமும் மக்கள் அணுகக் கூடியவராக விளங்குகிறார்.கடின உழைப்பும், நம்பிக்கையும் கொண்டு எப்போதும் மக்களின் பக்கம் நிற்பவர் என்று மக்களாலே கொண்டாடப்பட்டவர்.

மாவட்ட உருவாக்கம்:
மயிலாடுதுறைமாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்த சூழலில் நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசு சேவைகள் எளிதில் கிடைக்கவும் புதிய மாவட்டம் தேவையானது என தொடர்ந்து வலியுறுத்தி அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி சாதித்தவர்.


மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்னர், பூம்புகார் தொகுதி தொடர்பான நிர்வாக மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பட தொடர்ந்து முயற்சி செய்து மக்கள் வாழ்வாதாரம் உயர உழைத்தவர்.


டெல்டா விவசாயிகள் நலன்:
டெல்டா பகுதி விவசாயிகளுக்கான நீர்விநியோகம் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும் என அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வலியுறுத்தியதோடுசிறு கால்வாய்கள், நீர்ப்பாசன வாய்க்கால்கள் சுத்திகரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பான பணிகளை முன்னெடுத்துள்ளார்
விவசாய பம்ப் செட்களுக்கு தடையற்ற மின்விநியோகம் வழங்கவும் புயல் பாதிப்பின்போது விவசாயிகளுக்கு விரைவான நிவாரணத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.


மீனவர்களின் நண்பர்:


பூம்புகார் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த நவீன மீன்பிடி தளம் அமைப்புத் திட்டத்தை செயல்படுத்த முன்னின்று அனைத்து பணிகளையும் மேற்கொண்டவர்
மீனவர்களுக்கு பாதுகாப்பான துறைமுக வசதி, படகு நிறுத்துமிடம், குளிர்சாதன சேமிப்பு வசதி போன்ற அடிப்படை அமைப்புகள் உருவாகவேண்டிய அவசியத்தை சட்டமன்றத்தில் வலியுறுத்திப் பெற்றுத் தந்தவர்
இதன் மூலம் கடலோர மீனவர்களின் வருமானம் உயரவும், பாதுகாப்பான மீன்பிடி சூழல் உருவாகவும் உதவிய பண்பாளர்.


சுகாதார மேம்பாடு:முதன்மை சுகாதார நிலையங்களில்மருத்துவர், செவிலியர் நியமனம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தவும்கிராமப்புறங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை எளிதில் கிடைக்கவும் ஆவன செய்த மக்கள் சேவகர் இவர்.
பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு முகாம்கள், கண் பரிசோதனை, இரத்த தான முகாம்கள் நடத்த ஆதரவு அளித்து மக்கள் அன்புக்கு பாத்திரமானவர்


கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள், மருத்துவ உதவிகள் வழங்க பல செயல்பாடுகளை முன்னெடுத்தவர்.


மக்கள் பாதுகாப்பு:

பெண்கள்மற்றும் மாணவிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையுடன் தொடர்ந்து ஆலோசனை செய்து முன்னேற்பாடுகள் மேற்கொண்டவர்
விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் சாலை சீரமைப்பு மற்றும் வேகக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுத்ததோடு.தொகுதியில் நிலவும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்கள் சந்திப்பு மூலம் தீர்வு காண முயற்சி மேற்கொண்டவர்.


உயர்ந்த பண்புகள்:
ஊழல் குற்றச்சாட்டு ஏதுமின்றி, அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுபவர்.மக்களுக்கு எளிதில் அணுகக்கூடியவர்.பொதுமக்களின் நலனே அவரின் முதன்மை குறிக்கோளாகக் கொண்டவர்.


இத்தனை பணிகளை அவர் முன்னெடுத்ததை மக்கள் நன்றியோடு நினைவு கூர்வதாலும் தற்போதைய ஆட்சியின் அவலங்களை அனுபவித்து விட்டதாலும் மக்கள் தங்களுக்கான தலைவர் பவுன்ராஜ் அவர்கள் தான் என முடிவு செய்து விட்டதாக கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.


டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தனியார் சர்வே நிறுவனம் பூம்புகார் தொகுதியில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் திருமிகு பவுன்ராஜ் அவர்கள் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறும் வாய்ப்பு மிக அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.


சர்வே முடிவுகளின்படி, பூம்புகார் மக்களிடையே பவுன்ராஜ் அவர்கள் “நிரந்தர எம்எல்ஏ” என்ற நம்பிக்கை வலுவாக உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சித் தரப்பில் உள்ள வேட்பாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு, பவுன்ராஜ் அவர்களின் வெற்றி வாய்ப்பு உறுதியாக இருப்பதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

மொத்தத்தில், தொகுதி முழுவதும் நிலவும் சாதகமான பொது மனநிலை, வரவிருக்கும் தேர்தலில் அவருக்கான ஆதரவை மேலும் உறுதிப்படுத்துவதாக சர்வே அறிக்கை கூறுகிறது.


இத்தகைய சாத்தியங்களும் சாதனைகளும் நிறைந்த திரு. பவுன்ராஜ் அவர்கள் தான் மீண்டும் தனது வெற்றித் தொகுதியில் வேட்பாளராக நின்று மாபெரும் வெற்றி அடைவார் என்று தலைமை முழு நம்பிக்கை கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *