தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
சில நேரங்களில் காற்றின் வேகம் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
