India

தேர்தல் முறைகேடு.. இந்த நம்பருக்கு தெரிவிக்குங்கள்.. – மத்திய அரசு புதிய ஹெல்ப்லைன் அறிவிப்பு!

தேர்தல் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) புதிய உதவி எண்களை அறிவித்துள்ளது. மேலும், முக்கிய தகவல்களை வழங்குபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலின் செலவினங்களை கண்காணிக்கும் பொறுப்பை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் காலத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, தங்கம், போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல் போன்ற செயல்பாடுகளைத் தடுக்க இது முக்கிய பங்காற்றுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் குறித்து உடனடியாக தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக தனிப்பட்ட உதவி எண்கள், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தகவல் அளிப்பவர்களின் அடையாளம் பாதுகாப்பாக வைக்கப்படும்.

அவர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி வெகுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் நேர்மையை காக்கவும், மக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *