Site icon ITamilTv

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் – மாணவர்களுக்கு All the Best சொன்ன EPS

Say No To Drugs & DMK

Say No To Drugs & DMK

Spread the love

EPS WISH : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தேர்வு மையங்களில் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்று தொடங்கும் இந்த தேர்வு மார்ச் 22ம் தேதியோடு முடிவடைகின்றது.

இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கவுள்ள பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள அனைத்து மாணவச் செல்வங்களும் ,

Also Read : https://itamiltv.com/tn-12th-public-exam-starts-today/

தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அச்சமும் இன்றி, “இது உங்கள் திறனை வெளிக்காட்டும் களம்” என்ற தெளிவான சிந்தனையுடன் நன்றாக தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்கள் எடுத்து, விருப்பமான உயர்கல்வி படிப்பினைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

All the Best ! என எடப்பாடி பழனிசாமி (EPS WISH) வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version