ITamilTv

“இந்தா கெளம்பிட்டாங்கள்ல..!” – ஓ.பி.எஸ். பெயரில் 5 பேர் மனுத்தாக்கல்!

5 OPS in Ramanathapuram

Spread the love

5 OPS in Ramanathapuram : நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையோடு (27.03.2024) நிறைவடையும் நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனுக்கலை தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் மட்டும் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது 5 OPS in Ramanathapuram.

அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓ.பி.எஸ். எடுத்த சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அவருக்கு எதிரான முடிவுகளையே தந்த நிலையில், ‘அதிமுக மீட்புக்குழு’ என்ற ஒன்றைத் துவங்கி எடப்பாடி பழனிச்சாமி வசம் இருக்கும் அதிமுகவை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார் ஓ.பி.எஸ்.

5 OPS in Ramanathapuram
பன்னீர் செல்வம், ஒச்சத்தேவர் வாகைகுளம், திருமங்களம்

தவிர, ஒரு அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய உட்கட்டமைப்புகளான மாவட்ட செயலாளர்கள் முதல் கிளைக்கழக செயலாளர்கள் வரை ஓ.பி.எஸ். தனக்கென தனி விங் அமைத்து செயல் பட்டாலும், அரசியல் கட்சி எதையுமே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாததால் ஓ.பி.எஸ். அணி என்ற ஒரு அணியாக மட்டுமே அவரால் செயல்பட முடிகிறது.

இதையும் படிங்க : 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்துப் போடு, இல்ல இங்கிருந்து ஓடு.. வேட்பாளர்களின் சட்டையை பிடிக்க தயாராகும் மதுரை மக்கள்..!

இந்நிலையில், பாஜகவின் தீவிர விசுவாசியாக மாறியிருக்கும் ஓ.பி.எஸ்.சுக்கு தற்போது ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது பாஜக தலைமை. அதே நேரத்தில், பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப் படுவதற்கு முன்பாகவே, “இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” எனவும், “இரட்டை இலையை முடக்குவோம்” எனவும் அடிக்கடி கூறி வந்தார் ஓ.பி.எஸ்.

பன்னீர் செல்வம். ஒச்சப்பன் மேக்கிழார் பட்டி, உசிலம்பட்டி

எனவே, ‘அதிமுகவில் இருந்து நிரந்தரமாக விலக்கப்பட்ட ஓ.பி.எஸ்., கட்சியின் கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த தடை விதிக்குமாறு அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தை நாடியதை அடுத்து இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி மற்றும் அதிமுகவின் அடையாளங்களை ஓ.பி.எஸ். பயன்படுத்த நிரந்தர தடை விதித்த நீதிமன்றம், சின்னம் தொடர்பான கோரிக்கைகளுக்கு தேர்தல் ஆணையத்தை அனுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது.

எனவே, இந்த பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பி.எஸ்., வாளி, திராட்சை கொத்து மற்றும் பலாப்பழம் ஆகிய மூன்று சின்ன்ங்களில் ஏதேனும் ஒன்றை தருமாறு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருக்கிறார். இந்நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு நாளை (27.03.2024) கடைசி நாள் என்பதால் நேற்று (25.03.2024) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஓ.பி.எஸ். தரப்பில் அனுமதிச்சீட்டு பெறப்பட்டடிருந்தது.

ஒ. பன்னீர் செல்வம். ஒய்யாத்தேவர் சோலை அழகுபுரம்

அதே போல, திமுக கூட்டணியில் போட்டியிடும் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் ஆகியோரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலரிடம் அனுமதிச்சீட்டு கோரியிருந்தனர்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு முதலிலும், அடுத்து ஓ.பி.எஸ், மூன்றாவதாக திமுக வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோருகு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்நிலையில் முதலாவதாக வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அதிமுக வேட்பாளர் ஜெயப்பெருமாள் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

இவர்கள் மனுத்தாக்கல் செய்ய தேர்தல் அலுவலரின் அறைக்குள் நுழைந்தபோதே, தனது பிரசார வாகனத்தில் ஆட்சியர் வளாகத்தினுள் நுழைந்தார் பாஜக கூட்டணி வேட்பாளரான ஓ.பன்னீர்செல்வம். இதனிடையே தேர்தல் அலுவலரிடம் மனுத்தாக்கல் செய்ய சென்ற அ.தி.மு.க வேட்பாளர், சில படிவங்களை எடுத்துச் செல்லாததால் மனுத்தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டது. இதனால் வெளியில் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டார்.

எனவே, “அப்பாடா. ஒரு கடமை முடிஞ்சிருச்சுப்பா..” என அவர் ஆசுவாசமாகி பாஜக மற்றும் தனது அணிகளை சார்ந்தவர்களுடன் தேர்தல் பனிமனையில் ஆலோசனை செய்து கொண்டிருக்கும் போதுதான் அந்த அதிர்சித் தகவல் அவருக்கு போன் மூலம் எட்டி இருக்கிறது.

பன்னீர் செல்வம். ஒய்யாரம், தெற்குகாட்டூர், ராமநாதபுரம்

அதாவது, ஏற்கனவே, ஓ.பன்னீர் செல்வம் என்ற தனது பெயரில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 2 பேர் ராம நாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் கிடைக்கவே, “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..” என சாதாரனமாக எடுத்துக் கொண்டாராம் ஓ.பி.எஸ்.

இந்த சூழலில்தான், அதே ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் மேலும் 2 பேர் அதே ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது 5 OPS in Ramanathapuram.

தற்போதைய நிலவரப்படி, பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டிய்டிடும் முன்னால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தோடு சேர்த்து மொத்தம் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்னும் என்னென்ன கூத்தையெல்லாம் பார்க்கப் போகிறதோ தமிழக அரசியல் களம்!

இதையும் படிங்க : ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு ரூ.583.43 கோடியாம்!


Spread the love
Exit mobile version