Site icon ITamilTv

கடலில் குளித்த பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு – குமரியில் நிகழந்த சோக சம்பவம்..!!

trainee doctors

trainee doctors

Spread the love

கன்னியாகுமரியில் உள்ள லெமூர் கடற்கரையில் கடலில் குளித்த பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் ( trainee doctors ) உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பயிற்சி மருத்துவர்கள் 12 பேர் லெமூர் கடற்கரையில் கடலில் குளித்தபோது சில பேரை ராட்சச அலை இழுத்துச் சென்றுள்ளது .

இதையடுத்து காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்த நிலையில் காணாமல் போன மாணவர்களை தேடும் பணியில் இறங்கினர்.

Also Read : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாஃபர் சாதிக்கின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு..!!

பல மணிநேர தேடுதல் பணிக்கு பிறகு பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழந்த நிலையிலும் 3 பேரை ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டனர் .

இதில் தஞ்சையைச் சேர்ந்த சாருகவி (24), நெய்வேலியைச் சேர்ந்த காயத்ரி (25), ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேஷ் (24), திண்டுக்கலைச் சேர்ந்த ப்ரவீன் (23), குமரியைச் சேர்ந்த சர்வதர்ஷித் (23) ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்ததாகவும் . மாற்றுப்பாதையில் தடையை மீறி குளித்ததால் 5 பேர் பலியாகி உள்ளதாகவும் குமரி போலீசார் முதற்கட்ட தகவலை வெளியிட்டுள்ளனர்.

நன்றாக படித்து பயிற்சியை முடித்து பல உயிர்களை காப்பாற்றுவார்கள் என்று நினைத்த ( trainee doctors ) மருத்துவ மாணவர்கள் கடலில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love
Exit mobile version