போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஜாஃபர் சாதிக்கின் நீதிமன்றக்காவல் ( jaffer ) மே 29 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் 50 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் என்ற போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் என்ற அதிர்ச்சி தகவலை போலீசார் வெளியிட்டிருந்தனர்.
இதையடுத்து தி.மு.க.வில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார். பின்னர் ஜாபர் சாதிக்கை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் வட மாநிலத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து டெல்லி கூட்டிச்சென்ற ஜாபர் சாதிக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது .
இந்நிலையில் நாட்டை உலுக்கிய இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான் ஜாஃபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவலை மே மாதம் 29ஆம் தேதி வரை நீடித்து டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ( jaffer ) இன்று உத்தரவிட்டுள்ளது .