தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 9 ஆம் தேதி முதல் தற்காலிக ( provisional certificate ) மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 7.72 லட்சம் மாணவ மாணவிகள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர் . தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்ற இந்த பொதுத்தேர்வு மார்ச் 22ம் தேதியோடு வெற்றிகரமாக முடிந்தது .
இந்நிலையில் தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை இன்று காலை வெளியிட்டது.
Also Read : பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!
7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக மாணவர்களை விட மாணவிகளே இந்த ஆண்டும் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 9ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் மே 9 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் ( provisional certificate ) என்றும் மறுமதிப்பீடும், மறு கூட்டலுக்கு மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் துணைத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.