12th General Exam Result : 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகளை வெல்ல மாணவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : அட்சய திருதியை அன்று தங்கம் தவிர வேறு என்னென்ன பொருட்கள் எல்லாம் வாங்கலாம்?
இதுகுறித்து எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது..12th General Exam Result :
“12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண் தெய்வங்களின் சாதனைகள் தொடருவதற்கு வாழ்த்துகள்!
தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.37% ஆக உள்ள நிலையில்,
பெண் தெய்வங்களான மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.44% ஆக அதிகரித்திருக்கிறது. நினைவு தெரிந்த நாளில் இருந்து தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விஞ்சி வரும் பெண் தெய்வங்களுக்கு எனது வாழ்த்துகள்.
தேர்ச்சி விகிதத்தில் பெண் தெய்வங்களை வெல்ல மாணவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.