Site icon ITamilTv

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமைகள் பறிமுதல்

chennai airport

chennai airport

Spread the love

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமைகள் சென்னை விமானநிலைய அதிகாரிகள் ( chennai airport ) பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திகிலூட்டியுள்ளது.

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை சிவப்பு காது ஆமை குஞ்சுகள் பறிமுதல் செய்யபட்டது.

மலேசியாவில் இருந்து சென்னை வந்திறங்கிய பயணிகளில் சிலர் சோதனைக்கு பயந்து, அங்கும் இங்கும் நடமாடி வந்துள்ளனர் .

Also Read : இந்திய பயணத்தை ரத்து செய்தார் எலான் மஸ்க்..!!!

அவர்களை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரணை நடத்த நினைத்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போவிட்டனர் .

இதையடுத்து ஆமை குஞ்சுகள் இருந்த 2 சூட்கேஸ்களை கன்வேயர் பெல்டில் அந்த பயணிகள் விட்டுவிட்டு சென்றதை அறிந்த அதிகாரிகள் பெட்டிக்குள் இருந்த 5,000 ஆமை குஞ்சிகளையும் பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து கைப்பற்றப்பட்ட அந்த ஆமை குஞ்சுகளை மலேசிய நாட்டுக்கே ( chennai airport ) திருப்பி அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Spread the love
Exit mobile version