Tamilnadu

விஜய் நெல்லை விசிட்.. 51 நிபந்தனைகள் விதித்த போலீஸ்-தவெகவில் பரபரப்பு!

திருநெல்வேலியில் தவெக தலைவர் விஜய் நாளை நடத்த உள்ள தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறை 51 நிபந்தனைகள் விதித்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு மட்டும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

கேடிசி நகரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தார்.

பொதுக்கூட்டத்தை தொடர்ந்து, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம் மற்றும் நீதிமன்றம் வழியாக கேடிசி நகரம் வரை ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காவல்துறை விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றுவோம் என செங்கோட்டையன் உறுதி அளித்தார்.

மேலும், 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என்றும், வேட்பாளர் தேர்வில் தொண்டர்களின் விருப்பத்திற்கே முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *