அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக தினகரன் ஆகியோர் வெளியேறிவிட்டனர். இவர்களின் அடுத்தகட்ட நடவெடிக்கை என்னவாக இருக்கும், யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால், அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் தவெகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்கள் விஜய் குறித்து எழுப்பிய ஒரு கேள்விக்கு டிடிவி தினகரன் பதறி போய் பதில் சொல்லியுள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அமமுகவின் நிலைப்பாட்டை பலமுறை கூறிவிட்டேன். திரும்பியும் அரைத்த மாவை அரைக்க முடியாது. எல்லோரும் எதிர்பார்க்கிற படி உறுதியாக, இந்தமுறை அமமுக வெற்றி பெறும்.
அமமுக இடம்பெறுகிற கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். இதை ஆணவத்திலோ, அகங்காரத்திலோ சொல்லவில்லை.” எனக் கூறினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், “ஜெயலலிதா வழியில் விஜய் பயணிக்கிறார் என்று சொன்னீர்களே…” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு “நான் எங்கே அப்படி சொன்னேன். நான் எல்லாம் அப்படி சொல்லவில்லை.
உங்களை போல ஒரு செய்தியாளர் ஜெயலலிதா பாணியில் விஜய் பயணிப்பதாக கேட்டார்.
ஜெயலலிதா பாணியை கடைபிடிப்பது எங்களுக்கு பெருமை தானே என்று தான் கூறினேன்” என பதறிப் போய் பதிலளித்துள்ளார் தினகரன்.
மேலும் பேசிய அவர், “75 வருட கட்சிக்கும், 50 வருடக் கட்சிக்கும் இணையாக கட்டமைப்பை கொண்ட கட்சியாக அமமுக உருவாகியுள்ளது. அதை வருகிற தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பொறுத்திருந்து பாருங்கள்.” எனக் கூறியுள்ளார்.