World

கத்தார் மீண்டும் தாக்கினால்.. ஈரானை முழுமையாக அழித்துவிடுவோம்” – டிரம்ப் எச்சரிக்கை!

கத்தாரில் உள்ள எல்என்ஜி எரிவாயு மையம் மீண்டும் தாக்கப்பட்டால், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயலை முழுமையாக அழித்துவிடுவோம்,” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக ஊடகப் பதிவில் கூறியதாவது: மத்திய கிழக்கில் நடந்த சம்பவங்களால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, இஸ்ரேல் ஈரானில் உள்ள முக்கியமான சவுத் பார்ஸ் எரிவாயு வயலை தாக்கியுள்ளது. ஆனால் அந்த மையத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் – அமெரிக்கா தாக்குதல்

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்பே தகவல் இல்லை என்றும், கத்தார் நாடு இதற்குச் சம்பந்தமே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த தாக்குதல் நடக்கப்போகிறது என்பது பற்றியும் கத்தாருக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால், இதற்குப் பதிலடியாக ஈரான் எந்த காரணமும் இல்லாமல் கத்தாரின் எல்என்ஜி மையத்தின் ஒரு பகுதியை தாக்கியுள்ளது என அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இஸ்ரேல் இனிமேல் சவுத் பார்ஸ் எரிவாயு வயலை தாக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

கத்தாரை தாக்க முயன்றால் நிலைமை மாறும்

ஆனால், ஈரான் மீண்டும் கத்தாரை தாக்க முயன்றால் நிலைமை மாறும் என்றும் எச்சரித்துள்ளார். அப்படி நடந்தால், இஸ்ரேலின் உதவியுடன் அல்லது உதவி இல்லாமலும் அமெரிக்கா, ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயலை மிக வலுவாக தாக்கி முற்றிலும் அழித்துவிடும் என்று கூறியுள்ளார்.

இத்தகைய தாக்குதல் ஈரானின் எதிர்காலத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதைத் தவிர்க்க விரும்புகிறேன் என்றும், ஆனால் கத்தார் மீண்டும் தாக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் பரபரப்பு எச்சரிக்கை

இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானை தாக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. ஈரானின் எண்ணெய் வளங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. அதற்கு பதிலாக, ஈரான் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால், உலகளவில் எரிசக்தி சந்தைகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் உலக நாடுகள் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *