Tamilnadu

லாக்டவுன் மீண்டும் வருமா? அமித்ஷா கொடுத்த தெளிவான பதில்- மக்கள் நிம்மதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொண்ட போது, அவர் அளித்த பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்தார்.

லாக்டவுன் மீண்டும் வருமா?

நாட்டின் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும், மற்ற சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா நிலையான நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார். உலகளவில் எரிபொருள் தொடர்பான சிக்கல்கள் உருவாகி வரும் நிலையில், பல நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

இந்த சூழ்நிலையிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமித் ஷா தெரிவித்தார்.

அமித் ஷா தெளிவான பதில்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி போன்ற எரிபொருட்களின் பற்றாக்குறை இல்லை என்றும், அவை வழக்கம்போல கிடைக்கின்றன என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் அந்த சுமையை குறைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மக்களுக்கு அதிக சுமை ஏற்படாமல் கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளின் தாக்கம் இருந்தாலும், நாட்டின் தேவைகளை சமாளிக்கும் வகையில் அரசு தொடர்ந்து கண்காணித்து செயல்பட்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *