Tamilnadu

அரசு பேருந்தில் டிஸ்ப்ளேவில் ‘தவெக’ பெயரா? மக்கள் ஷாக்.. போக்குவரத்துக் கழகம் விளக்கம!

அரசு பேருந்து ஒன்றில், வழித்தடத்தை அறிவிக்க வைக்கப்பட்டிருக்கும் டிஸ்ப்ளேவில், திடீரென தமிழக வெற்றிக் கழகம் என பெயர் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

இதனையடுத்து நடந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து கழகம் விளக்கமளித்திருக்கிறது.அதாவது, TN45 M4853 என்கிற பதிவெண் கொண்ட அரசு பேருந்தில், கட்சி பெயர் டிஸ்ப்ளேவில் தெரிவதாக சோஷியல் மீடியாக்களில் புகார்கள் வந்தன.

‘அரசு பஸ்’ தரப்பில் விளக்கம்

வழக்கமாக இந்த டிஸ்ப்ளேவில், பேருந்து எந்த வழித்தடத்தில் பயணிக்கிறது? என்பதுதான் அறிவிக்கப்படும். ஆனால், கட்சியின் பெயர அறிவிக்கப்பட்டிருந்ததால் பயணிகள் புகார் அளித்திருந்தனர்.

இது குறித்து ‘அரசு பஸ்’ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, “சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோவில் உள்ள பேருந்தானது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த புதிய பேருந்து ஆகும். இப்பேருந்தில் உள்ள மின்னணு வழித்தடப் பலகையில் (Electronic Route Board) சில வாசகங்கள் இடம்பெற்றது குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப் பேருந்தின் வழித்தடப் பலகையினை இயக்கும் மென்பொருள் பலகையை (Motherboard) ஹேக் (Hack) செய்து, இத்தகைய தவறான வாசகங்களை பதிவிட்டது கண்டறியப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்:

• இச்சம்பவம் நேற்று கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக அந்த மின்னணு பலகையின் மதர்போர்டு (Motherboard) மாற்றப்பட்டு, சரியான வழித்தட விவரங்கள் பதிவேற்றப்பட்டன.

• இது போன்ற செயல்கள் இனி நிகழாமல் இருக்கவும், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மின்னணு பலகை சேவை வழங்கும் நிறுவனத்திற்கு (Service Provider) அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *