Tamilnadu

பூத் சிலிப் விநியோகம் எப்போது? வெளியான முக்கிய விவரம்!

வாக்குப் பதிவு

சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் இறுதி பட்டியலின் அடிப்படையில் வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) அச்சிடப்பட்டு ஏப்ரல் 10 முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

தகவல் சீட்டில் வரிசை எண் மற்றும் பாகம் எண் வழக்கத்தை விட இம்முறை பெரிதாக அச்சிடப்படும். புகைப்படத்துக்கு பதிலாக க்யூ ஆர் குறியீடு இடம்பெற்றிருக்கும்.

வாக்குப் பதிவுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் தகவல் சீட்டுகளை விநியோகித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூத் சிலிப்பை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்த இயலாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது அதற்கு மாற்றாக ஆதார் உள்பட 12 ஆவணங்களைப் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *