Tamilnadu

பள்ளி மாணவர்களுக்கு புதிய கற்றல் முறை… தமிழகத்தில் புதிய பாடத்திட்டம்!

தமிழ்நாட்டில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பின்னர், புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஒன்பது புதிய பாடநூல்கள் வெளியிடப்பட்டன.

இந்த புதிய பாடநூல்கள் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும், அவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் கற்றலின் மூலம் எதிர்பார்க்கப்படும் கல்வி திறன்களை அடைய உதவும் வகையில் பாடப்பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், குழந்தைகள் ஆர்வமாக கற்கும் வகையில் கதைகள், பாடல்கள் மற்றும் பல்வேறு செயல்பாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன. இத்துடன், மாணவர்களின் உடல் இயக்க திறன், சமூக உணர்வு, வாழ்க்கைத் திறன் மற்றும் நல்ல பண்புகள் வளர்க்கும் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அழகான வண்ண வடிவமைப்பில் இந்த பாடநூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், 1 முதல் 3ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் மற்றும் கற்பித்தல் முறைகள் தொடர்பான பயிற்சி ஜூன் 1 முதல் ஜூன் 3, 2026 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *