India Tamilnadu

“தமிழினத்தின் எதிரியா ஜோசப் விஜய்?” – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

தமிழர்களுக்கு வழங்கப்பட்ட பத்ம விருதுகள் குறித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவிக்காததை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளை பெற்றிருந்தனர். இந்த சாதனையை தமிழக அரசு உரிய முறையில் பாராட்டவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதள பதிவில் நயினார் நாகேந்திரன், சாதாரண பின்னணியில் இருந்து தங்களது திறமையால் உயர்ந்த தமிழர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றார். ஆனால், அவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது ஏமாற்றமளிப்பதாக கூறினார்.

மேலும், சோழர் கால வரலாற்று சின்னமான ஆனைமங்கல செப்பேடுகள் தமிழ்நாட்டிற்கு திரும்பியதற்கும் முதலமைச்சர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார். தமிழக மக்களின் ஆதரவால் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவர், தமிழர்களின் சாதனைகளை கொண்டாட வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *