Site icon ITamilTv

ADMK VS BJP-”BJP-யில் இருந்து விலக இதுதான் காரணம்..” மனம் திறந்த EPS!

பட்டாசு ஆலைகள்

பட்டாசு ஆலைகள்

Spread the love

ADMK VS BJP-தமிழ்நாட்டு மக்களின் பிரச்னையை எடுத்து கூறினால், காது கொடுத்து கேட்பதில்லை என்பதால் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக இரு கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொடா்ந்து கருத்து மோதல் நடைபெற்று வந்தது.

தொடர்ந்து மதுரையில் ஆகஸ்ட் 20-இல் நடைபெற்ற அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டை பாஜகவின் மாநிலத் தலைமை ,

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை சிறுமைப்படுத்தியும் அவதூறாக விமா்சித்தும் பேசி இருந்தார்.

ஒரு கட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக கட்சி தலைவர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது அதிமுக நிர்வாகிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: EPS vs A Raja-”நாவடக்கம் தேவை..”ஆ.ராசாவை எச்சரித்த ஈ.பி.எஸ்..!

இந்த கூட்டத்தில், மூத்த நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, டி.ஜெயக்குமாா், தம்பிதுரை, பா.வளா்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன் உள்பட அதிமுகவின் 65 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனா்.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியைத் தொடர வேண்டாம் என்று அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதைத் தொடா்ந்து இறுதியாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார். மேலும் இதற்கான தீா்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: OPS health | ”OPS-க்கு திடீர் உடல் நலக்குறைவு..” மருத்துவர்கள் கொடுத்த Report!

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த காரணத்தை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலம் சங்ககிரியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி,”

“முதலமைச்சர் ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் தொடர்பாக மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது.

சென்னையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது.” என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர் ,”தமிழ்நாட்டு மக்களின் பிரச்னையை எடுத்து கூறினால், காது கொடுத்து கேட்பதில்லை என்பதால் பாஜக கூட்டணியில் (ADMK VS BJP) இருந்து தனியாக பிரிந்து வந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக மக்களின் பிரச்னைகளை யார் சரி செய்வார்களோ, அவர்களுக்கு பிரச்னையின் அடிப்படையில் ஆதரவு அளிக்கப்படும். அதிமுக தலைமையிலான சிறப்பான கூட்டணி அமையும் என்று தெரிவித்தார்.

PUBLISHED BY : S.vidhya


Spread the love
Exit mobile version