EPS vs A Raja-”ராஜா அவர்களுக்கு நாவடக்கம் தேவை என்று ” எம்ஜிஆர் குறித்து அவதூறாக பேசிய திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி,”
எம்ஜிஆர்-ன் முகம் காட்டித் தான் 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது.30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்தது.
மக்களின் 50 ஆண்டுகால போராட்டத்திற்கு மதிப்பளித்து அதிமுகவின் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் ,கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் ஊழல் செய்தவர் தான் ராஜா.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் கோடி ஊழல் ஊழல் செய்து கொள்ளையடித்த ராஜா அதிமுகவின் தலைவர் எம்ஜிஆர் ஐ பற்றி பேச எந்த அறுகைதையும் இல்லை என்றுதெரிவித்தார்.
மேலும் விஞ்ஞான முறையில் ஊழல் செய்கிற கட்சி திமுக கட்சி என்று கடுமையாக விமர்சித்தார்.
மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆண்டிமுத்து ராசாவின் வாடிக்கை,அவர் பேசிய பாணியில்,
அவரைப் போல் அல்லாமல் , பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் தெரியும் என்றாலும், தரம் தாழ்ந்த திமுக அளவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் தரம் தாழாது .
இந்த விடியா திமுக ஆட்சியில், எனது தலைமையிலான கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதி அவர்களின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டியும்,
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1755840442799972544?s=20
பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் , கழகத்தின் இதயதெய்வங்களான புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகழுக்கு இணையாக கருணாநிதியின் பெயரை என்ன
முயற்சித்தும் உயர்த்த முடியவில்லை என்ற ஆற்றாமையில் தான் ஆண்டிமுத்து ராசா போன்றோர் இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதாக நான் கருதுகிறேன்.
வரலாறு நெடுக எங்கள் இதயதெய்வங்களை பிம்பச்சிறையிட திமுகவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் படுதோல்வியையே சந்தித்துள்ளன.
அதே போல, இனிவரும் காலங்களிலும் திமுகவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மக்கள் மனங்களில் வாழும் இதயதெய்வங்களின் புகழை எள்ளளவும் குறைக்கமுடியாது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆண்டிமுத்து ராசாவிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
PUBLISHED BY : S.vidhya