Site icon itamiltv.com

அதிமுக கூட்டணி சீட் பங்கீடு முடிவு… பாஜக 27, பாமக 18, அமமுக 11!

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பெரும்பாலும் சுமுகமாக முடிவடைந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும்.

என்.டி.ஏ கூட்டணி பேச்சுவார்த்தை

இந்த நிலையில், பெரிய அளவிலான சிக்கல்கள் ஏதுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகள் இடையிலான தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக அதிக தொகுதிகளை எதிர்பார்த்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அந்தக் கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேபோல், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக 27, பாமக 18, அமமுக 11

மற்ற கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் முழுமையான பட்டியல் வெளியிடப்படும் என்றும் அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது.

மறுபுறம், திமுக தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளை இணைத்ததுடன், அதிமுகவிலிருந்து சில முக்கிய தலைவர்களையும் தனது அணியில் சேர்த்துள்ளது.

டெல்லி தலைமை அழுத்தம்

அதே நேரத்தில், தொகுதிப் பங்கீட்டையும் படிப்படியாக முடித்து வருகிறது.இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் ஆரம்பத்தில் சில இழுபறி நிலவுவதாகவும், குறிப்பாக பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகள் வழங்க டெல்லி தலைமையிலிருந்து அழுத்தம் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவியது.

மேலும், பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் கூடுதல் இடங்களை கோரியதாக கூறப்பட்டது.இத்தகைய சூழலில், இன்று பாஜக, பாமக, அமமுக ஆகிய மூன்று முக்கிய கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி இறுதி செய்துள்ளார்.

இந்த மூன்று கட்சிகளுக்கே இரட்டை இலக்க தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற சிறிய கூட்டணி கட்சிகளுக்கு ஒற்றை இலக்க தொகுதிகள் வழங்கப்படும் எனவும், அவற்றுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version