Tamilnadu

அதிமுகவின் முழு வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு – மாஸ் காட்டும் எடப்பாடி!

அதிமுக கட்சியின் முழுமையான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திமுக கட்சி பெரிய கூட்டணியுடன் களமிறங்கியுள்ளது. அதே நேரத்தில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் வலுவாக அமைந்துள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. அதன்படி பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மொத்தம் 65 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 169 தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிடுகிறது.

இந்த தொகுதிகளின் விவரங்களை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல முக்கிய தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது.

மேலும், முதல் கட்டமாக 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் தங்களது பழைய தொகுதிகளை மாற்றி புதிய தொகுதிகளில் போட்டியிட உள்ளனர்.

இதனால், மீதமுள்ள வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *