அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் டெல்லி செல்ல இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 17, அமமுகக்கு 9, தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 234 தொகுதிகளில் அதிமுக சுமார் 120 இடங்களில் போட்டியிட திட்டமிட்டு, மீதமுள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க உள்ளது. மேலும் சில சிறிய கட்சிகளுக்கும் இடம் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
பாஜக கூடுதல் தொகுதிகள் கேட்டதாக கூறப்பட்டாலும், அதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்ததாக தகவல். கூட்டணி தொடர்பான இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
