ITamilTv

ஆவினில் சிறுவர்களை பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Spread the love

அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பொருட்கள் தயாரிப்பு பண்ணையில் ஒப்பந்தப் பணியாளர்களாக 50க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :

“ஆவின் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்”

“குத்தகை தொழிலாளர் முறையின் மனித உரிமை மீறல்களுக்கு ஆவின் அத்துமீறல்களே சான்று என்றும் அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் குத்தகைத் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார் .


Spread the love
Exit mobile version