Site icon ITamilTv

AIADMK Value தெரியாமல் பேசும் அண்ணாமலை

AIADMK Value

AIADMK Value

Spread the love

அதிமுகவின் மதிப்பு (AIADMK Value) தெரியாமல் லேகியம் விற்பவர் போல அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்

தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் .

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில் கூறிருப்பதாவது :

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு,

“ஓ.பன்னீர்செல்வத்திற்கு மன குழப்பம் உள்ளது. அவருக்கு மூளை குழம்பியுள்ளது. அவர் உடனே மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

நேற்று வரை பெரிய பொறுப்பில் இருந்தவர் பாவம். திடீரென பொதுக்குழு எடுத்த ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அதிர்ச்சிக்கு உள்ளாகி, நிராயுதபாணியாக உள்ளார் என தெரிவித்தார் .

கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அமித்ஷா தெரிவித்தது குறித்த கேள்விக்கு :

“அதிமுக கூட்டணி (AIADMK Value) இறுதி செய்யப்பட்டு விட்டது. பாஜகவுடன் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என அறிவிக்கப்பட்டு விட்டது.

அண்ணாவை, அம்மாவை பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும் தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் இருக்க முடியாது.

இயக்கத்தின் மதிப்பீடு அவருக்கு தெரியவில்லை. கவுன்சிலர் கூட ஜெயிக்காதவர் அவர். அரசியல் அனுபவம் அவருக்கில்லை.

தேர்தலில் நின்று வென்றால் தான் பக்குவம் வரும். லேகியம் விற்பவர் மாதிரி பேசி கொண்டிருக்கிறார்.

அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது. இது 2 கோடி தொண்டர்களின் எச்சரிக்கை.

ஆண்டவனே வந்தாலும் அதிமுகவை தொட்டுப்பார்க்க முடியாது. பொறுமைக்கு ஒரு அளவு இருக்கிறது தம்பி.

நாங்கள் பேச ஆரம்பித்தால் வேஷ்டியை கழட்டி விட்டு நீ ஓடி விட வேண்டும், கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம்.

அண்ணாமலையிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார்.

Also Read : https://itamiltv.com/48-illegally-constructed-buildings-seal/

கடந்த சில மாதங்களுக்கு முன் அண்ணன் தம்பி போல் பழகி வந்த அதிமுகவும் பாஜகவும் இன்று -பரம எதிரி போல் சண்டை செய்து வருவது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக இம்முறை இந்த பெரும் கட்சிகளும் தனி தனியாக தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் இந்த இரு காட்சிகளில் யாருக்கு ஓட்டுகள் அதிகம் கிடைக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்


Spread the love
Exit mobile version