ITamilTv

”இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா..”-கொதித்த சோனியா காந்தி!!

Spread the love

இஸ்ரேலுக்கு(israel) எதிரான வாக்கெடுப்பில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடக்கும் இந்த போரில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

மேலும் இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இடையே நிகழ்ந்து வரும் போரை உடனடியாகப் போர் நிறுத்தம் தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா. அழைப்பு விடுத்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பை ஏற்று கலந்து கொண்ட உலக நாடுகள் முன்னிலையில் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அந்த தீர்மானத்தை 120 ஆதரவாகவும் 14 எதிராகவும் வாக்களித்தது, அதே நேரத்தில் இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை.

மேலும் இந்த தீர்மானம், விரோதங்களை நிறுத்த வழிவகுக்கும்.” “பயங்கரவாதச் செயல்கள், கண்மூடித்தனமான தாக்குதல்கள், அத்துடன் தூண்டுதல், தூண்டுதல் மற்றும் அழிவை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் உட்பட பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் பொதுமக்களுக்கு எதிரான அனைத்து வன்முறைச் செயல்களையும்” கண்டிக்கிறது என்று ஐ.நா. குறிப்பிட்டு இருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது : இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது சரியல்ல. இது கண்டிக்கத்தக்கது. இஸ்ரேலுடன் சமாதானமாக இணைந்து பாலஸ்தீனம் நடந்து கொள்ள வேண்டும் என்பது காங்கிரஸ் நிலைப்பாடு.

அங்கு இறையாண்மை கொண்ட சுதந்திரமான, சாத்தியமான மற்றும் பாதுகாப்பான தேசம் அமைய நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். உடனடியாக அங்கு போரை நிறுத்த பல நாடுகளும் முயற்சி செய்ய வேண்டும் சோனியா காந்தி கூறியுள்ளார்.


Spread the love
Exit mobile version