ITamilTv

ஆம்ஸ்ட்ராங் கொலை : சரண் அடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை – திருமாவளவன்!

Thirumavalavan

Spread the love

விசிக தலைவர் தொல் திருமாவளவன் (Thirumavalavan) செய்தியாளர் சந்திப்பு;-

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர்.

கொலையின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இப்பொழுது சரணடைந்து இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை, அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களை தூண்டி விட்டவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்..

சரண் அடைந்தவர்களை கைது செய்ய கைது செய்து விட்டோம் என்ற அடிப்படையில் புலன் விசாரணை நிறுத்தி விடக்கூடாது..

உண்மையான குற்றவாளிகள் யாரோ அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்..

பொதுமக்களுக்காக தலையீடுபவர் அதற்காக அவருக்காக ஆங்காங்கே பகை எழுந்து இருக்கிறது.. அதற்குரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கி இருக்க வேண்டும், ஆனால் வழங்கவில்லை அது அதிர்ச்சி அளிக்கிறது..

இதையும் படிங்க : ஆம்ஸ்ட்ராங் கொலை : பழிக்கு பழி.. பகீர் வாக்குமூலம்! எச்சரித்த உளவுத்துறை! நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் தலித்துக்கள் தலித் இளைஞர்கள் குறிப்பாக தமிழக தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடிக்கிறது.. இன்று ஒரு அரசியல் தலைவர் அவரது இல்லத்தின் அருகிலேயே கொல்லப்பட்டிருக்கிறார் இது காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால்..

கூலிப்படைகளை சாத்தியவாதி கும்பலை கொலைகார கும்பலை அடையாளம் கண்டு அவர்களை கட்டுப்படுத்த தவறினால் அரசுக்கு மேலும் இதனால் களங்கம் ஏற்படும்..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்

அவரது கட்சி அலுவலக வளாகத்திற்குள் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது..

இதனை அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் Thirumavalavan.


Spread the love
Exit mobile version