Site icon ITamilTv

ஆம்ஸ்ட்ராங் மனைவியை சட்டமன்றத்திற்கு அனுப்பவேண்டும் – இயக்குநர் பா.ரஞ்சித்

Armstrong's wife

Armstrong's wife

Spread the love

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பா.ரஞ்சித் கூறியதாவது :

இரண்டு விஷயங்கள், எந்த அரசியல் சலுகைகளை கொண்டு யாரும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் இருந்து தப்ப கூடாது, அரசியலில் நமது பங்கு என்ன ? அதில் முக்கியமான கடமை ஒன்று திருமதி. ஆம்ஸ்ட்ராங்கை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும். யார் யாரோ வெற்றி பெறுகிறார்கள், நம்மால் ஏன் ஆக முடியாது?

Also Read : தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைது..!!

இந்தியாவில் மூன்று சதவீதம் மட்டுமே உள்ளவர்கள் நாட்டை ஆளும் போது நாம் ஏன் ஆள முடியாது?
வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேரின் அக்கவுண்டல் மிகப்பெரிய தொகை வந்துள்ளது, ஆகையால் நமது வழக்கறிஞர்கள் கவனமாக பார்க்க வேண்டும். வழக்கில் மறு விசாரணை தேவை, வழக்கில் சம்பந்தப்பட்ட யாரும் விட்டு விட கூடாது, ஏன் சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்டார்?. இவர் கொலைக்கு தேவைப்பட்டவரா என்ற சந்தேகம் உள்ளது. இதனை இங்குள்ள காவல் துறை பதில் சொல்ல வேண்டும். இது எங்களது உரிமையாகும். சில சந்தேகமான விஷயங்கள் எல்லோரும் இருக்கு, இதனை சாதாரணமாக விட்டு விட கூடாது. இது ரவுடிகளுக்கு ஏற்பட்ட சண்டை என தெரிவிக்கின்றனர்.

இது ரவுடி கும்பல்களின் மோதல் இல்லை. இதற்கு திருமதி ஆம்ஸ்ட்ராங், ஆனந்தன் உள்ளிட்டோர் காவல் துறை அறிக்கையை கவனமாக பார்க்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு தேர்தல் அரசியலோடு இதனை பார்க்க வேண்டும், இது ஆம்ஸ்ட்ராங் ஆற்றலாக மாற்ற வேண்டும், திருமதி ஆம்ஸ்ட்ராங் திருவள்ளூர் தொகுதியில் நிற்க வைத்து திட்டுமிட்டு வெற்றி பெற இப்போதே வேலை செய்ய வேண்டும். ஏற்கனவே தனித்து நின்று வெற்றி பெற்ற வரலாறு உண்டு. ஆம்ஸ்ட்ராங் யார் என்று கேட்வர்களுக்கு பதிலாக சொல்ல வேண்டும். அதற்கு நான் வேலை செய்ய தயாராக உள்ளேன் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version