Site icon ITamilTv

வழக்கு முடியும் வரை முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன் – அரவிந்த் கெஜ்ரிவால்

Arvind Kejriwal

Arvind Kejriwal

Spread the love

என்மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கு முடியும் வரை முதல்வர் இருக்கையில் அமர போவதில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக திகார் சிறையில் இருந்து வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிய கட்சி தலைமையகத்திற்கு சென்றார். அங்கு அவர் ஆம் ஆத்மி கட்சிக்கு நன்றி தெரிவித்தார்.

Also Read : விரைவில் ஓடிடியில் வெளியாகிறது ‘லால் சலாம்’ – டக்கர் அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!!

இதன்பிறகு அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் “நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கிய போதிலும், வழக்கு தொடரும். என் வழக்கறிஞர்களிடம் பேசினேன். வழக்கு முடியும் வரை முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன்.

இரண்டு நாட்களுக்கு பிறகு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்து மீண்டும் இருக்கையில் அமரவைக்கும் வரை நான் முதல்வர் இருக்கையில் அமரமாட்டேன்.” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Spread the love
Exit mobile version