Bengaluru restaurant blast-பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு (bangalore blast) சம்பவத்தில் மேற்குவங்கத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள பிரபல ரெஸ்டாரண்ட்டான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி பயங்கர சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்தது.
இந்த விபத்தில் அந்த உணவகத்தில் இருந்த பலர் படுகாயமடைந்தனர்.இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு – முக்கிய குற்றவாளி கைது..!!
இதையடுத்து அங்குள்ள cctv காட்சிங்களை சோதனை செய்தபோது மர்ம நபர் ஒருவர் வெள்ளை நிற தொப்பி அணிந்து பேருந்தில் வந்து உணவகத்திற்குள் சென்று டோக்கன் வாங்கி ரவை இட்லி சாப்பிட்டு விட்டு,
தான் கொண்டு வந்த கை பையை ஹோட்டலில் வைத்துச் சென்றுள்ளார். அந்த நபர் வேக வேகமாக சென்று அரசு பேருந்தில் ஏறிச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது அந்த நபர் சென்ற பிறகு ஒரு மணி நேரம் கழித்து குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததுள்ளது.
மேலும் அங்கு நிகழ்ந்தது குண்டு விடுப்பு என தெள்ள தெளிவாக தெரிந்தது.இதையடுத்து இந்த வழக்கு வேற திசைக்கு மாற குண்டுவெடிப்பு என்ன காரணம் யார் இதை செய்தது என்பதை அம்மாநில போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்புக்கு பின்னால் ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் (NIA) இந்த குண்டுவெடுப்பு வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மார்ச் 29 ஆம் தேதி இச்சம்பவத்தில், மூளையாக செயல்பட்டது முஷாவீர் ஹுசைன் ஜாகிர் என்பது தெரியவந்தது.ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் இருவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த சூழலில் மேற்கு வங்கத்தில் முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா உள்பட 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.