Site icon ITamilTv

நீலகிரியில் பாஜக 100% வெற்றி பெரும் – அடித்து சொன்ன எல்.முருகன்..!!!

Lmurugan

Lmurugan

Spread the love

Lmurugan : நீலகிரி மக்களவை தொகுதியில் பாஜக 100% வெற்றி பெரும் என மத்திய இணை அமைச்சரும் நீலகிரி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் நம்பிகை தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் பொது மக்கள் திரை பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது பொன்னான வாக்குகளை பதிவு செய்தனர் .

தமிழகத்தில் இந்த வாக்குப்பதிவானது கடந்த தேர்தலை விட அதிகம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்

இந்நிலையில் நீலகிரி மக்களவை தொகுதியில் பாஜக 100% வெற்றி பெரும் என மத்திய இணை அமைச்சரும் நீலகிரி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் நம்பிகை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறியதாவது :

நாட்டின் வளர்ச்சி மற்றும் 2047-ல் நாடு வல்லரசாக வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு மக்கள் அனைவருக்கும் வாக்களித்துள்ளனர் . தேசத்தின் வளர்ச்சிக்காக, ஊழல் இல்லாத ஆட்சி அமைய பாஜக ஆட்சியில் அமர வேண்டும் .

நீலகிரி தொகுதியில் பாஜகவின் வெற்றி 100 சதவீதம் உறுதி என எல்.முருகன் (Lmurugan) நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version