India

வருடத்திற்கு 2 சிலிண்டர்கள்..மாதம் ரூ. 3,000 – கேரளாவில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள்!

கேரளம் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க மும்முரமாக இருந்துவரும் பாஜக இன்று, அம்மாநிலத்திற்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

கேரளாவில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள்:

  • ஏழை குடும்பங்களுக்கு வருடத்திற்கு இரண்டு கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். ஓனம் மற்றும் கிருஸ்துமஸ் ஆகிய பண்டிகை காலங்களில் இந்த சிலிண்டர்கள் வழங்கப்படும்.
  • தகுதியான பெண்களுக்கு ஆரோகிய சுரக்‌ஷா எனும் ரூ. 2,500 மதிப்புள்ள அட்டை வழங்கப்படும். இது மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யப்படும். இதனை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான மளிகை, மருந்துகளை வாங்கிக்கொள்ளலாம்.
  • கேரளாவில் எய்ம்ஸ் அமைக்கப்படும்.
  • தகுதியான பெண்கள், கைம்பெண்கள் மற்றும் 70 வயதுக்கு மேல் இருக்கும் முதிய பெண்களுக்கு மாதம் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு மாதமும் 20,000 தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.
  • சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரியம் காக்க தனி சட்டம் உருவாக்கப்படும்.
  • திருவனந்தபுரம் – கன்னூர் பகுதிகளை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் சேவை உருவாக்கப்படும் என்பன முக்கிய வாக்குறுதிகளாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *