ITamilTv

தமிழக ஆளுநர் மீது வழக்கு! – உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு!

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி காலம் தாழ்த்துவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழக ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்டார். தமிழக ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.

காரணம் தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு அல்லுனர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளிப்பதில்லை. குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக மசோதா இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கபட்டது. ஆனால் ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையில், அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதன் காரணமாக ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார்.

அதே போல் நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கான அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் அந்த மசோதாவை பல மாதங்கள் கிடப்பில் போட்ட நிலையில், மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நீட் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதாவை பல மாதங்கள் கழித்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பி வைத்தார். இதே போல அண்ணா பல்கலைக்கழக சட்ட மசோதா, மெட்ராஸ் யூனிவர்சிட்டி சட்ட மசோதா, தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமாக சட்ட மசோதாக்கள், துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்க வேண்டும் போன்ற விதிகளை திருத்தம் செய்தத சட்ட மசோதா என 10க்கும் மேற்பட்ட மசோதாக்கள் கிடப்பில் உள்ளன.

இதனால் தமிழக அரசின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்ட மசோதாக்களுக்கு குறிப்பிட்ட கால வரம்புக்குள் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version