Site icon ITamilTv

Chandigarh Mayor Election | சி.சி.டி.வி. கேமராவை பார்த்தது ஏன்? கேள்விகளால் துளைத்த நீதிபதி!

ChandigarhMayorElection

ChandigarhMayorElection

Spread the love

Chandigarh Mayor Election | சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தவை ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி ( 30-01-24) சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்துப் போட்டியிட்டன.

காலையில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதில் மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 16 ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், இதில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

அப்போது பா.ஜ.க குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையாக குற்றம்சாட்டியது.

இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1759884981026136443?s=20

இதனையடுத்து பாஜக மேயர் வேட்பாளரை வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்ததை எதிர்த்து ஆம் ஆத்மி,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தனர்.

மேலும் ஆதாரங்களுடன் வீடியோ ஒன்றையும் சமர்ப்பித்தது.

இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

தேர்தலை நடத்தும் விதம் இதுதானா? என சண்டிகர் மேயர் தேர்தல் (Chandigarh Mayor Election) நடத்திய அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்து,

தேர்தல் என்ற பெயரில் அங்கு நடந்த செயல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயல்.வாக்கு சீட்டுகளை தேர்தல் அதிகாரி திருத்தி தில்லுமுல்லு செய்தது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஜனநாயகத்தை படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.இதனை தொடர்ந்து சண்டிகர் மாநகராட்சியின் முதல் கூட்டத்தொடரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சத்திஸ்கர் தேர்தல் தொடர்பான வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான தேர்தல் அதிகாரி அனில் மாக்‌ஷியிடம் தலைமை நீதிபதி, கேள்விகளை சரமாரியாக முன்வைத்தார்.

இதையும் படிங்க: Chandigarh Mayor Election- ”ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயல்..”-கடுப்பான நீதிபதி!!

வாக்கு சீட்டுகளில் கையெழுத்திடுவதை தவிர, வேறு திருத்தம் செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என அவர் வினவினார்.

வாக்கு சீட்டுகளில் திருத்தம் செய்தபோது சி.சி.டி.வி. கேமராவை பார்த்தது ஏன் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்தார்.

தேர்தலை கேலிக்கூத்தாக்கியதாக சாடிய தலைமை நீதிபதி,(Chandigarh Mayor Election)இது ஜனநாயக படுகொலை எனவும் காட்டமாக கூறினார்.

அப்போது, வாக்குச் சீட்டுகளை வேட்பாளர்கள் சேதப்படுத்தியதாக தேர்தல் அதிகாரி விளக்கமளித்தார்.

அதனையடுத்து அந்த 8 வாக்கு சீட்டுகளையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

எந்தக் கட்சியையும் சாராத புதிய தேர்தல் அதிகாரியை நியமித்து, உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மீண்டும் வாக்குச் சீட்டுகளை எண்ணி முடித்து,

அதன் முடிவை உச்சநீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Spread the love
Exit mobile version