Tamilnadu

கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி – ‘செல்ஃபி’ எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியின் அழகை ரசித்தபடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை குடும்பத்தினருடன் நடைபயிற்சி மேற்கொண்டார்.

சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்ததால், ஓய்வெடுக்க அவர் குடும்பத்துடன் நேற்று மதியம் கொடைக்கானல் வந்தார். வழியெங்கும் பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வரும் முதல்வரை, பாதுகாப்பு காரணங்களால் கட்சியினர் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.

அவரது வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை மனைவி துர்காவும் உறவினர்களும் உடன் ஏரி பகுதியை சுற்றி நடைபயிற்சி செய்தார்.

அப்போது பொதுமக்களுடன் பேசிக் கொண்டு, அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்தார். தூய்மை பணியாளர்களிடம் பேசிக் கொண்டு அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.

ஒரு மணி நேரத்திற்கு பின் அவர் மீண்டும் விடுதிக்கு திரும்பினார். ஏப்ரல் 29 வரை ஓய்வெடுத்து, 30ஆம் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார். அந்த வரை ட்ரோன் பறப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *