ITamilTv

அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Spread the love

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலலிதா ஆட்சி காலத்தில் புனையப்பட்ட பொய் வழக்கில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது . இதை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .

சென்னை உள்பட அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 5 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வரும் நிலையில் அமைச்சர் பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கௌதம் சிகாமணி இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .

செம்மண் குவாரி தொடர்பாக,கடந்த 2012ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அமலாக்கத்துறை தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிருப்பதாவது :

“அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை .மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலலிதா ஆட்சி காலத்தில் புனையப்பட்ட பொய் வழக்கில் தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது”

10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, இந்த வழக்கில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . அமலாக்கத்துறையின் இந்த சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார் .

வடமாநிலங்களில் பயன்படுத்திய உத்தியை பாஜக தற்போது தமிழ்நாட்டில் பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்காக பாஜக செய்யும் தந்திரம்தான் இந்த அமலாக்கத்துறை சோதனை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .


Spread the love
Exit mobile version